கருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம் 


திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திமுகவினர், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட நாள் முதல் நாள்தோறும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

              

இந்நிலையில், கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கருணாநிதிக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணியளவில், சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தர் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் அதன் உறுப்பினர்களும், பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

             

POST COMMENTS VIEW COMMENTS