நயன்தாரா, த்ரிஷா, எமி ஜாக்சன் நிராகரித்த கதையில் ராய் லட்சுமி!


தமிழின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, த்ரிஷா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நிராகரித்த கதையில் நடிகை ராய் லட்சுமி நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்த ராய் லட்சுமி ’ஜூலி 2’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதன் பின் இந்தியில் மீண்டும் நடிக்கவில்லை. மலையாளத்தில் இவர் நடித்துள்ள, ’ஒரு குட்டநாடன் பிளாக்’, ’அராபியன் சபாரி’ படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தமிழில் அவர் நடித்த ’யார்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து ’நீயா 2’வில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடனும் கன்ன டத்தில் ஜான்சி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து தமிழில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் அவர் நடிக்கிறார். இது, ஹாலிவுட்டில், கேட் பிளாஞ்செட், லில்லி ஜேம்ஸ், ரிச்சர்ட் மாடென் உட்பட பலர் நடித்து 2015-ல் வெளியான ’சின்ட்ரெல்லா’ படம் போல உருவாகிறது. தமிழிலும் இதற்கு சின்ட்ரெல்லா என்றே பெயர் வைத்துள்ளனர். ஆனால் இது அதன் ரீமேக் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குன ராக பணியாற்றிய வினோத் வெங்கடேசன் இயக்குகிறார்.

‘இந்த படத்தின் கதையில் ஹாரார், பேண்டஸி, மியூசிக்கல், த்ரில்லர், டிராமா என  எல்லா ஜானர்களும் இருக்கின்றன. சென்னையில் தொடங் கும் கதை அடர்ந்த காட்டுக்குள் நடக்கிறது. ஊட்டி அல்லது வெளிநாட்டில் இதை படமாக்க இருக்கிறோம். அக்டோபர் மாதம் ஷூட்டிங் நடக்கிறது. இந்தக் கதையை நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, எமி ஜாக்சன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட சில முன்னணி ஹீரோயின்களிடம் இயக்குனர் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க முன் வரவில்லை. இதில் ராய் லட்சுமி மூன்று கெட்டப்புகளில் வருகிறார்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS