சீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’


விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ‘மெர்சல்’ இந்தப் படம் கடந்த வருடம் தீபாவளி அன்று வெளியானது. தமிழகம் முழுவதும் இல்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூடவே மாபெரும் வசூலையும் ஈட்டியது. நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அளவுக்கு பெரும் சாதனையை செய்த படம் இல்லை என பலரும் கூறியிருந்தனர். லண்டன் பெஸ்ட் வெளிநாட்டு மொழிக்காளுக்கான திரைப்படம் விருதினையும் இது தட்டி சென்றது.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தினை சீனாவில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இதனை சீனாவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காக சீன மொழியில் படத்தை டப் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு ‘மெர்சல்’ சீன மொழியில் வெளியானால் இதுவே சீன மொழியில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை அடைய உள்ளது குறிப்படத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS