வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்


அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் இணையும் திரைப்படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இடையில் திமுக தலைவர் கருணாநதி மறைவுக்கு அஞ்சலி செய்வதற்காக அஜித் சென்னை வந்து சென்றார். இந்நிலையில் அஜித்தின் புதிய தோற்ற கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அழகான கறுப்பு டி-ஷர்ட்டில் அவர் மிக இயல்பாக பேசுவதை போல அந்தப் புகைப்படம் உள்ளது. 

‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. நயன்தாரா தனது முழுப் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதில் அஜித் இருவேறு வேடங்களில் நடித்து வருகிறார். அவரின் இளமை தோற்றத்திற்கான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சிவா இதனை பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் விவேக், தம்பிராமைய்யா, போஸ்வெங்கட், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS