ஒரே நாளில் 30 லட்சம் பேர் பார்த்த மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ ஃபர்ஸ்ட் லுக்


தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் எடுக்கப்பட்டு வரும்‘மகரிஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ஒரே நாளில் 30 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். 

மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ பட ஃபர்ஸ்ட் லுக், யுடியூப் டிரெண்டிங்கில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ப்ளே பாயாக வரும் மகேஷ்பாபுவின் திரைப்படங்களுக்கு டோலிவுட்டில் மட்டுமல்லாமல், கோலிவுட்டிலும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபுவின் 43-ஆவது பிறந்தநாளான நேற்று அவரது ரசிகர்களுக்கு ‘மகரிஷி’திரைப்படத்தின் டீசர், விருந்து படைத்தது. 

ஃபர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்ட மகேஷ்பாபு, என் புதிய பயணத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ‘மகரிஷி’, மகேஷ் பாபுவின் 25ஆவது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS