விஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..!


விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் இடையேயான பிரச்னை காரணமாக விஸ்வரூபம் 2 திரைப்படம் மதுரையில் வெளியாகவில்லை.

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் முதல்பாகம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. முதல்பாகத்திற்கு அப்போது பல எதிர்ப்புகள் கிளம்பியதால் விஸ்வரூபம் பல சிக்கலுக்கு மத்தியிலேயே வெளியானது. தற்போது இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் ரா அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பூஜா குமார், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் இடையேயான பிரச்னை காரணமாக விஸ்வரூபம் 2 திரைப்படம் மதுரையில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னதாக,  ‘விஸ்வரூபம்2’ படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS