டிசம்பரில் வெளியாகும் ‘காஞ்சனா 3’? 


‘பிக்பாஸ்’வெற்றிக்குப் பிறகு நடிகை ஓவியா நடித்து வரும் ‘காஞ்சனா 3’படத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

‘காஞ்சனா 3’ கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பமானது. ‘முனி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘காஞ்சனா2’வை எடுத்தார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்து வருகின்றனர். முதற்கட்டமாக வேதிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு தொடர்ச்சியான படப்பிடிப்பில் ஓவியாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஓவியா பங்கேற்கும் காட்சிகளுக்கான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஓவியா நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக காணப்படுகிறார். ‘பிக்பாஸ்’ வெளிச்சத்திற்குப் பிறகு  அவர் நடித்து வரும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தினை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

 

POST COMMENTS VIEW COMMENTS