கருணாநிதிக்காக விஜய்யின் ‘சர்கார்’ படப்பிடிப்பு இரத்து


‘சர்கார்’ படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் கொல்கத்தாவில் நடைபெற்றது. பின் சில நடைமுறை பிரச்னைகளால் சென்னையிலேயே நடைபெற்று வந்தது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக திமுக தலைவர் கருணாநிதியை அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் அமெரிக்கா படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் கருணாநிதி சென்னையில் காலமானார். ஆகவே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நடிகர் விஜய்யால் வர முடியவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மனைவி, கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற வந்து ‘சர்கார்’ படப்பிடிப்பின் போது கருணாநிதி இறந்த தகவல் கிடைத்துள்ளது. ஆகவே படக்குழுவினருக்கு விஜய் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். அவரது மறைவையொட்டி அன்று ஒருநாள் மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என கூறியிருக்கிறார். அவரது முடிவை ஏற்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது ‘சர்கார்’ படக்குழு. ஏற்குறைய 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காகவே விஜய் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS