திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி


திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை த்ரிஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.

முதுபெரும் அரசியல் ஆளுமையான திமுக தலைவர் கருணாநிதியின் உடல், அரசு மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியா விடை அளித்தனர். கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு கூடாரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் இன்று காலை முதலே கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் கருணாநிதியின் புகைப்படத்தை, வணங்கி மரியாதை செய்தார்.

POST COMMENTS VIEW COMMENTS