கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: பிக்பாஸில் கமல்ஹாசன் பேச்சு


கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வவ்போது தமிழக அரசியல் குறித்து மறைமுகமாக பேசினார் கமல்ஹாசன். அவர் பேசிய பேச்சுகள் சில நேரங்களில் விவாதங்களானது.

ஆனால், கட்சி தொடங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியிலும் அவர் ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது அரசியல் குறித்து மறைமுகமாக பேசி வரும் கமல்ஹாசன் இந்த வாரம், கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என கூறினார். எப்பொழுதும் கிரிக்கெட் பற்றி பெரிதாக பேச காரணம் அதன் மூலம் திசை திருப்ப முடியும் என்பதே என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS