ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக உருவானது எப்படி..? வருகிறது சீரியல்..!


பாகுபலி படத்திற்கு முன் என்ன நடந்திருக்கும்..? மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன் உருவானது எப்படி என்பது குறித்த தொடர் வெளியாக உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இருபாகமும் வசூலில் பல சாதனைகள் படைத்தன. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பு. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பலரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். இப்படத்தில் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். மகிழ்மதி சாம்ராஜ்யம் இவர் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கும்.

இந்நிலையில் பாகுபலி முதல் பாகத்திற்கும் முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நெட்ப்ளிக்ஸ் வெப் சீரியலாக தயாரிக்க உள்ளது. இதில் ரம்யாகிருஷ்ணன் எப்படி மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராணியாக வளர்ந்தார் போன்ற விவரங்கள் காட்டப்படும் எனத் தெரிகிறது. பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதனை வைத்து தற்போது சீரியல் வெளியாக உள்ளது. படத்தில் இருந்ததை போலவே பிரம்மாண்டம், வியக்க வைக்கும் காட்சிகள் உள்ளிட்டவையும் இந்த தொடரில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS