லண்டனில் உடல் எடையை குறைத்த ’கேப்டன்’ மகன்!


’கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன். ’சகாப்தம்’, ’மதுரவீரன்’ படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அங்கு விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை தனது வலதுகையில் பச்சைக்குத்திக் கொண்டார்.

இந்நிலையில் திடீரென்று தனது இணைய தளப் பக்கத்தில் வெளிநாட்டு பெண் ஒருவரை தோளோடு சேர்த்து அணைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அந்தப்பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அந்தப் பெண்ணுடன் அவர் டேட்டிங் செய்கிறாரா அல்லது அடுத்தப்பட ஹீரோயினா என்று ரசிகர்கள் குழம்பியதால் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதற்கிடையே போட்டோஷூட் நடத்தி முடித்துள்ளார் சண்முகப்பாண்டியன். பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் அவரை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சண்முகப்பாண்டியன், உடல் எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளாராம்!

அந்தப் புகைப்படத் தொகுப்பு:

’’மதுரவீரன்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் உடல் எடையை குறைப்பதற்காகத்தான் அவர் லண்டன் சென்றார். சில மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையை குறைத்தார். கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
இதையடுத்து புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது’ என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

POST COMMENTS VIEW COMMENTS