தெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா


தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்கள் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் நடிகை நந்திதா. 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தற்போது அவர் தெலுங்கில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தெலுங்கில் இவரது முதல் படம் ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா’. அந்தப் படம் நல்ல வசூலைக் குவித்தது. ஆகவே தெலுங்கிலும் ‘லக்கி ஆக்டர்’எனப் பெயர் பெற்றார். இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். 

இது குறித்து நந்திதா,“தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம்’படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்பக் கதைக்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்தப் படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் பல வீரதீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். 

இதற்கு முன் ‘சதுரங்கவேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்தேன். தமிழில் வெளியான‘டார்லிங்2’படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பிரேம கதாசித்திரம்2’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படபிடிப்பு இந்தமாதம் தொடங்குகிறது. தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும்,‘நர்மதா’ என்ற படத்திலும் நடிக்கிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாக இருக்கிறேன்”என்றார்.
 

POST COMMENTS VIEW COMMENTS