சிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி? உண்மையை உடைத்த சமந்தா!


’இரும்புத்திரை’ படத்தை அடுத்து சமந்தா நடித்துள்ள படம், ’சீமராஜா’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றனர்.

படத்தில் கதைப்படி சுந்தந்திர தேவி என்கிற சிலம்ப ஆசிரியையாக வருகிறார் சமந்தா. இதற்காக சமந்தா சிலம்பம் கற்றுள்ளார். மூன்று மாதம் இந்த சிலம்பப் பயிற்சியை அவர் கடுமையாகப் பயின்றதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார். ஆனால், இதை மறுத்துள்ளார் சமந்தா. ‘நான் இதன் 15 வகுப்புத்தான் சென்றேன். அதனால் ரொம்ப எதிர்பார்க்காதீங்க’ என்று உண்மையை உடைத்துள்ளார் சமந்தா.

இந்தப் படத்தை அடுத்து, சூப்பர் டீலக்ஸ், யுடர்ன் படங்கள் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கின்றன.

POST COMMENTS VIEW COMMENTS