விநாயகர் சதுர்த்தி அன்று ‘சீமராஜா’ ரிலீஸ்


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சீமராஜா’. முதன்முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சிவா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் கைகோர்த்துள்ளார். கிராம பின்னணி கொண்ட காமெடி படமாக சீமராஜா தயாராகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இசை வெளியீடு மற்றும் அடுத்தடுத்த சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  
 

POST COMMENTS VIEW COMMENTS