அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..!


அஜித்திற்கு மகளாக நடித்த சிறுமிக்கு மீண்டும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. அருண் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா. இதற்கு முன் ஒருசில மலையாள படத்தில் நடித்திருந்தாலும் ‘என்னை அறிந்தால்’ தான் சிறுமி அனிகாவுக்கு முதல் தமிழ் படம். அதனைத்தொடர்ந்து  ‘நானும் ரௌடிதான்’, ‘மிருதன்’ உள்ளிட்ட பல படங்களில் தோன்றிய அவர், ‘மா’ என்ற குறும்படத்திலும் நடித்தார். இதில் இவரின் நடிப்பு பலரால் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அஜித் படத்தில் நடிக்க உள்ளார் அனிகா.

சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிறுமி அனிகா நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மீண்டும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அனிகா அதிக மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS