“அரசியலுக்கு நிச்சயம் வருவேன்” - நடிகர் பார்த்திபன்


18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து கூறும் அளவிற்கு தனக்கு அரசியல் தெரியாது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன். அதற்காக கால அவகாசத்தை எடுத்துக்கொண்டுள்ளேன்” என்று நகைச்சுவையாய் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “18 எம்எல்ஏக்கள் வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றி தெரியாது. அதற்காகத்தான் கால அவகாசம். ப்ளாஸ்டிக் தடை உத்தரவு என்ற அரசின் ஆணை கூட, ப்ளாஸ்டிக் கவரில் வைத்தே கொடுக்கப்படும் என நினைக்கிறேன். ப்ளாஸ்டிக்கிற்கு மாற்றுவழி என்ன? என்பதை கண்டறிய வேண்டும். எஸ்வி சேகரை கைது செய்யாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்” என்று கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS