செப்டம்பர் 13 சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் டே


சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ வரும் செப்டம்பர் 13 அன்று திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘வேலைக்காரன்’ படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீமராஜா’. இதனை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் சிவகார்த்திகேயனுக்கு அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை சம்பாதித்து கொடுத்தது. காமெடி கலந்த அந்தப் படம் சிவாவின் திரை வாழ்வில் ஒரு அக்மார்க் அடையாளத்தை ஏற்படுத்தியது. ‘சீமராஜா’ படத்தில் இருவேறு கெட் அப்பில் சிவா நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. 

இதனை 24ஏஎம் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இதில் சிவாவின் டப்பிங் பணிகள் மே மாதம் தொடங்கின. மேலும் இதன் படப்பிடிப்புகள் முழுக்க நிறைவடைய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அதில், “எங்களின் ‘சீமராஜா’ படப்பிடிப்பு வரும் ஜூன் 19 உடன் நிறைவு பெறுகிறது. அதனை அடுத்து செப்டம்பர் 13 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர். 

POST COMMENTS VIEW COMMENTS