அடுத்த படத்தை கையிலெடுக்கிறாரா தனுஷ்..?


ப.பாண்டியை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த 2017-ஆம் வெளியான திரைப்படம் ‘ப.பாண்டி’. தனுஷ் இயக்கநராக அடியெடுத்து வைத்த முதல் படம். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தனுஷை நல்ல இயக்குநராக மக்கள் மத்தியில் அறியச் செய்தது. இந்நிலையில் தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இம்மாத இறுதியில் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் தனுஷ். கிட்டத்தட்ட ஜூன் மாதம் வரை இப்படத்தின் படப்பிடிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. எனவே அதற்கு பின் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டாவது படத்தை இயக்குவதற்கான முயற்சிகளை நடிகர் தனுஷ் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தேனாண்டாள் கம்பெனி தயாரிக்க உள்ளது. இதற்கு பின் 2019-ம் ஆண்டு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

POST COMMENTS VIEW COMMENTS