‘சீமராஜா’ டப்பிங்கில் சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயன் இன்று தொடங்கியுள்ள ‘சீமராஜா’ படத்தின் டப்பிங்கில் பங்கேற்றுள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை சம்பாதித்து கொடுத்தவர் பொன்ராம். காமெடி கலந்த அந்தப் படம் சிவாவின் திரை வாழ்வில் ஒரு அக்மார்க் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில் இருவேறு கெட் அப்பில் சிவா நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் டப்பிங் இன்று தொடங்கி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களின் டப்பிங் வேலைகள் ஒரே நேரத்தில் தெடங்கியுள்ளது. இதில் தாடியுடன் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. 

POST COMMENTS VIEW COMMENTS