தமிழகம் கடும் வறட்சியை சந்திக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்


தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆதார அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருவமழை போதிய அளவு பெய்யாததும் இதன் காரணமாக அணைகளில் நீர் மட்டம் குறைந்ததும் வறட்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு இறுதியில் பருவ மழைக் காலத்தில் 26 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிந்த போதும் இந்தாண்டில் முதல் 4 மாதங்களில் 84 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை மைய புள்ளிவிவரங்களை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகள் தூர் வாரப்படாமல் இருப்பதாகவும் இதனால் அவற்றின் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது புள்ளிவிவரங்களில் இருந்து தெளிவாக தெரிய வருவதாகவும் தற்போதைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிலத்தடி நீரின் அளவு போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS