விளைநிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


விளைநிலம் வழியாக கெயில் ‌நிறுவனம் எரிவாயுக் குழாய்களை‌ப் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெய்யனூரிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் கூடிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக முழக்கமிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ‌மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல, தமிழகத்திலும் நெடுஞ்சாலை வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளைநிலம் பாதிக்காமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS