விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்....விவசாயிகள் கவலை...கெயில் திட்டம் குறித்து சிறப்பு தொகுப்பு


தமிழகத்தில் விவசாய நிலங்களில்‌ எரிவாயுக் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. விளை நிலங்கள் வழியாக எரிவாயுக‌‌‌ குழாய்கள் பதிப்பதனால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இதுபோன்ற திட்டத்தினால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்ற கருத்தை பொருளாதர வல்லுநர்கள் முன் வைக்கின்றனர்.

சென்னை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‌ஈரோடு, தருமபுரி உள்பட தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக குழாய்கள் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழக அரசு இத்திட்டத்திற்கு தடை விதித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை 2013ம் ஆண்டு உயர்நீதிமன்றமும், தற்போது உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்கள் வழியாக எரிவா‌‌யுக் குழாய்கள் பதிப்பதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கும் விவசாயிகள், இதனால் ஏற்படும் விபத்துகளினால் ஆபத்து அதி‌கம் என்றும் அச்சமடைந்துள்ளனர்.

கெயில் சட்டதிட்டபடி தாங்கள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என ‌‌வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிவா‌‌யுக் குழாய்கள் அமைப்பதற்கு ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தாலும், இத்திட்‌டத்தினால் விளைநிலங்களுக்கு பாதிப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் தமிழகத்தில் வளர்ச்சியடையும் என்றும் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறையும் என்ற கருத்‌தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

தமிழகத்தில் குழாய்கள் அமைத்து எரிவாயு எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், மத்திய-மாநில அரசுகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS