பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய்க்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 3 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், அரசு துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக சென்னிமலையில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS