வேதாரண்யம் அருகே கடைமடை பகுதியில் சம்பா விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு கடைமடை பாசனப்பகுதியில் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருவமழை காரணமாக சூல் வரும் நேரத்தில் நெற்பயிர்கள் ஒரு வாரத்திற்கு மேல் நீரால் சூழப்பட்டு இருந்ததால் நெற்கதிர்கள் வெளிவருவது பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி, புகையான் நோய் தாக்கியதாலும் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். மேலும், அறுவடைக்குத் தேவையான இயந்திரத்தை வழங்க வேளாண்மைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முறையாக நெல் விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 36 மூட்டை நெல் கிடைக்கும் என்றும், ஆனால் தற்போது ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக 12 மூட்டை நெல் தான் கிடைக்கிறது என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்‌.‌

POST COMMENTS VIEW COMMENTS