தொடரும் விலைவீழ்ச்சி: நிவாரணம் வழங்க ரப்பர் விவசாயிகள் கோரிக்கை


கன்னியாகுமரி மாவட்டத்தில் விலைவீழ்ச்சி மற்றும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ரப்பர் விவசாயிகள் நிவராணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் அகிய மாதங்களில் ரப்பர் மரத்தின் இலைகள் உதிர்ந்து, பின்னர் ரப்பர் மரம் தளிர்விடும். மூன்று மாதங்கள் கழித்து ரப்பர் இலைகள் முதிர்ந்து மழை பெய்த பின்பு பால் வடிக்கும் பணி தொடங்கப்படும். ஏற்கனவே, வேலையின்றி பாதிக்கப்பட்டு தொழிலாளர் தற்போது இலையுதிர் க‌லம் தொடங்கியுள்ளதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு மீன் இனபெருக்க காலக்கட்டத்தில், நிவாரணம் வழங்குவது போல் ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS