பயிர்களைச் சேதப்படுத்தும் பறவைகளை விரட்ட குறைந்த விலை கருவி: கர்நாடக இளைஞர் கண்டுபிடிப்பு


விவசாய நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் பறவைகளை விரட்டுவதற்கான குறைந்த விலை கருவியை கர்நாடகாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

குல்பர்காவைச் சேர்ந்த சிவராஜ் என்ற அந்த இளைஞர் வடிவமைத்துள்ள இந்தக் கருவியை விளைநிலங்களில் பொருத்தினால், காற்றில் காற்றாடி போல இது சுற்றும்போது ஒளிர்வதுடன் அதிலிருந்து பறவைகளை அச்சுறுத்தும் ஒலியும் வெளியாகும். 100 ரூபாய் விலையுள்ள இக்கருவி மூலம், பறவைகள் விளைநிலங்களில் இறங்காமல் தடுக்கப்படும் என சிவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவி தயாரிக்க நூறு ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்ற நிலையில், விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பறவைகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டு நஷ்டமடைவதைத் தடுக்க இந்தக் கருவி உதவும் என விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS