முக்கிய உரங்களின் விலை குறைகிறது


பொட்டாஷ், பாஸ்பேட் உள்ளிட்ட சில உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரில் இது குறித்து பேசிய மத்திய உரத் துறை அமைச்சர் அனந்தகுமார், கடந்த 15 ஆண்டுகளாக இந்த உரங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் முதல் முறையாக இவற்றின் விலை குறைக்கப்படுவதாக தெரிவித்த‌ர்.

டி.ஏ.பி உரத்தின் விலை மூட்டைக்கு 100 முதல் 150 ரூபாய் குறைக்கப்படும் என்றும் எம்.ஓ.பி மற்றும் என்.பி.கே.உரங்களின் விலையும் டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விலைக் குறைப்பு குறித்த ‌அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் திங்கள் கிழமை வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS