அறுவடை இயந்திரம் கிடைக்காமல் பெரியக்குளம் விவசாயிகள் அவதி


தேனி பெரியக்குளம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான இயந்திரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இயந்திரங்கள் தாமதமாக கிடைப்பதால், அறுவடையும் தாமதமாகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நடவு முடிந்து 120 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய சூழலில், 140 நாள்கள் கடந்த பிறகும் அறுவடைக்கு இயந்திரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும், நெல்லுக்கு உரிய விலையையும் அரசு நிர்ணயம் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

POST COMMENTS VIEW COMMENTS