விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஜெயலலிதாவிடம் கோரிக்கை


தமிழக விவசாயிகள், அனைத்து வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடியைச் சந்தித்து, அவர்கள் மனு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா சந்திக்க உள்ள நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில், காவிரி விவகாரம், முல்லை பெரியாறு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் தீர்வு காண பிரதமரை, முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS