காவிரிப் பாசன மேம்பாட்டிற்காக ரூ.660 கோடி கடனுதவி: ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்


தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதி மேம்பாட்டுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி 660 கோடி ரூபாய் கடனுதவி வழங்க உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தெற்காசிய பிரிவு உயரதிகாரி மஞ்சுளா அமரசிங்கே, டெல்லியில் இதைத் தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதியில் உள்ள வெண்ணார் பகுதி ஏழை விவசாயிகளின் நலனுக்காக இத்தொகை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள 6 முக்கிய பாசனக் கால்வாய்களை மேம்படுத்துவதுடன் கதவணைகள், நீரேற்று நிலையங்களை மேம்படுத்தவும் இத்தொகை ‌பயன்படுத்தப்படும் என்று மஞ்சுளா அமரசிங்கே தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS