புதிய அணை கட்ட விதிமுறை: அமைச்சர் உமாபாரதி தகவல்


ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக நீர் செல்லும் நதிகளில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி தரப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி இதைக் கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆயிரம் கனஅடிக்கு குறைவாக நீர் ஓடும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்க மறுத்து விட்டதாக அவர் தெரிவித்தார். ஆற்றின் கடைமடைப் பகுதி வரை நீர் சென்று சேர்வதை உறுதி செய்யவும், எல்லாப் பகுதிகளிலும் சீரான நீரோட்டத்தை பராமரிக்கவும் இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்றும் உமாபாரதி தெரிவித்தார்.

கங்கை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நதிகளில் கழிவுநீர் சேராமல் தடுக்க, சுத்திகரிப்பு திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உமாபாரதி தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS