விவசாயம் செய்யப்போகிறேன்; தேசிய நெல் திருவிழாவில் நடிகர் விஷால் பேச்சு


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேசிய நெல் திருவிழா தொடங்கியுள்ளது. ஆதிரெங்கத்தில் நமது நெல்லை காப்போம் என்ற அமைப்பு சார்பில் 10 ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இந்த நெல் திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக்காத்திருக்கிறேன்.தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன். பத்திரிகைகளில் மட்டும் விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. நேரடியாக நிலத்தில் இறங்கிப் பார்த்தால் தான் அனுபவப்பூர்வமாக உணர முடியும் என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS