நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு


நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 60 ரூபாய் மத்திய அமைச்சரவை உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது 1,410 ஆக இருக்கும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1,470 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்துடன் சாதாரண ரக நெல்லுக்கு தமிழக அரசு கூடுதலாக வழங்கும் 50 ரூபாயுடன் சேர்த்து விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு1,520 ரூபாய் கிடைக்கும். இதைப்போலவே துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புக‌ளுக்கான ஆதார விலையும், சோயாபீன்ஸ், நிலக்கடலை உள்ளிட்டவற்றின் ஆதார விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS