2017-ல் விவசாய வருமானம் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு


மழைப்பொழிவு சரியான அளவில் இருக்கும் என்பதால், வரும் 2017-ம் ஆண்டில் விவாசாய வருமானம் 20 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஜேஎம் பைனான்சிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், நாட்டின் ஊரகப் பகுதிகளின் வருமானம் வரும் 2017 ஆம் நிதியாண்டில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் விவசாய வருமானம் சராசரியாகக் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் 3 சதவீதமும், 2015-16 ஆம் நிதியாண்டில் 4 சதவீதமும் குறைந்தது. இதற்கு முக்கிய காரணமாக முறையே மேற்குறிப்பிட்ட நிதியாண்டுகளில் சராசரி மழைப்பொழிவின் அளவு 12 மற்றும் 14 சதவீதம் குறைந்ததே என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் 18 சதவீதமாக இருந்த விவசாயிகளின் கடன் அளவு 2015-16 ஆம் நிதியாண்டில் 4 சதவீதம் அதிகரித்து சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும் உயர்ந்திருப்பதாக ஜே.எம்.பைனான்சிங் நிறுவனம் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS