பழங்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம்? விலை உயர்வு எவ்வளவு நாள் நீடிக்கும்... சிறப்பு தொகுப்பு


கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில்‌ பழங்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு என்ன காரணம்? இந்த விலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

நீர்சத்து, புரதச்சத்து அடங்கிய பழங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். அதிலும் கோடைக்காலங்களில் தேவை அதிகமாகவே இருக்கிறது. தற்போது கோடைகாலம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், பழங்களுக்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, அன்னாசி, மாம்பழம், தர்பூசணி ‌உள்ளிட்ட பழங்களின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ எடையுள்ள தர்பூசணி 10 ரூபாயாக இருந்தது. இப்போது அது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாம்பழம் தற்போது 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அன்னாசி, சாத்துக்குடி ஆகிய பழங்களின் விலையும் ஏறுமுகம் தான்.

பழங்களை பொறுத்தவரை, மே மாதம் என்றாலே மாம்பழம் தான் நினைவில் இருக்கும். மா பூ பூக்கும் வேளையில் கடும்வெயில் வாட்டியதால், பூக்கள் சேதமடைந்து மாம்பழ விளைச்சல் குறைந்துள்‌ளது. இதனால் மாம்பழங்கள் விலை உயர்ந்துள்ளது.

ப‌ழங்கள் உற்பத்தியை பொறுத்தவரை தமிழகத்தில் குறைவாக தான் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாரா‌ஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்துக்கு அதிகளவில் பழங்கள் வருகின்றன. ‌இந்த ஆண்டு வறட்சி காரணமாக ‌இந்த மாநிலங்களில் பழங்களின் விளைச்சல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS