குறைந்த பிரீமியத்தில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி


குறைந்த பிரிமியத்தில் விவசாயப் பயிர்களுக்கு காப்பீடு வசதி பெறும் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

முழுமையான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக வழங்கும் வகையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள இந்த திட்டம் குறித்து கடந்த மாதமே அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில், இப்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

தோட்டக் கலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு 5 சதவிகிதமும், உணவு தானியப் பயிர்களுக்கு ஒன்றரை முதல் இரண்டரை சதவிகிதமும் பிரிமியமாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த ஜூன் மாதம் தொடங்கவுள்ள காரீப் பருவம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS