சேலத்தில் மக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி: நடிகர் கார்த்தி பார்வையிட்டார்


சேலத்தில் மக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளை நடிகர் கார்த்தி‌ பார்வையிட்டார். மக்களே முன்வந்து தூர்வாரி சீரமைத்த மூக்கனேரி கரைப்பகுதியை தியானப்பகுதியாக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியிலும் கார்த்தி பங்கேற்றார். அதனை தொடர்ந்து குட் இயர்த், குட் ஹெல்த் என்ற இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.‘

தொடர்ந்து மக்களிடையே பேசிய கார்த்தி, ஏரி, குளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், புதியதலைமுறை, அகரம் அறக்கட்டளை, இந்து குழுமம் இணைந்து நடத்தும் யாதும் ஊரே திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS