8 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக வரும் 8 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2 ஆம் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்இந்த நீரினால் சுமார் 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

POST COMMENTS VIEW COMMENTS