ராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. உரிய நேரத்தில் பருவ மழை பெய்ததால் கடந்த 5 ஆண்டுகளை விட இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சேத்தூர், பிறாகுடி, சிலம்பநேரி, நடுவக்குளம், உமையாள்குளம் உள்ளிட்ட கண்மாய்களை நம்பி சாகுபடி செய்யப்பட்டிருந்த 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது.

மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட நிலங்கள் தவிர மற்ற பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 முதல் 35 மூட்டை வரை நெல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் சித்திரை மாத 2-ஆம் போக சாகுபடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என கூறும் விவசாயிகள், அரசு விதைப்பு நெல்லையும், உரங்களையும் உரிய நேரத்தில் மானியத்துடன் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS