புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சொந்த செலவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவசாயி


விழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணையாற்றில் தடுப்பணைக் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமான தென்பெண்ணையாறு, மலட்டாறு போன்றவை, பருவ மழை பொய்த்துப் போனதால் வறண்டு போய்விட்டதாக விவாயிகள் கூறுகின்றனர்.

மேலும், இரு ஆற்றிலும் தொடர்ந்து மணல் அள்ளியதாலும், தூர்வாரப்படாததாலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தளவனூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், மலட்டாறுக்கு நீர் வரும் என்றும், அதன் மூலம் நூறு கிராமங்கள் பயன்பெறும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுபற்றிய செய்தியை அண்மையில் புதிய தலைமுறை பதிவு செய்தது. இந்நிலையில், தணிகைவேலன் என்ற மாற்றுத்திறனாளி விவசாயி, தன் சொந்த செலவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 740 மீட்டர் அளவிற்கு மண் தடுப்பணை கட்டியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS