’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை


விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் தாக்கலாக உள்ள நிலையில், இதுதொடர்பாக பல்வேறு துறையினரை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் இன்று பேசினார். இதில் விளைபொருட்களுக்கான ஆதார விலையை அதிகரித்து தர வேண்டும், பயிர் காப்பீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும், நிலையான ஏற்றுமதிக் கொள்கை தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

யூரியா நேரடி மானிய முறை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும், விவசாயிகளின் சார்பில் மத்திய நிதி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

POST COMMENTS VIEW COMMENTS