விளை நிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரம்: காரமடை பகுதி விவசாயிகள் புகார்


தமிழக மின்வாரியத்தைக் கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் உரிய அனுமதி பெறாமல், விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS