புதுக்கோட்டை : மழை, காற்றால் பொங்கல் கரும்பு பயிர் பாதிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால், பொங்கல் பண்டிகைக்குப் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் ஒடிந்தும், சாய்ந்தும் சேதமடைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

செரியலூர், அரசர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் என்றும் கூறினர். கடந்த ஆண்டோ போதிய விளைச்சல் இல்லை, இந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் அறுவடை செய்ய முடியவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS