விவசாயிகளுக்கு தரமான விதை வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோன்று, காய்கறி சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி, மதுரை மாநகரங்களுக்கு விரிவுபடுத்தி அதற்கு அடையாளமாக 2 பயனாளிகளுக்கு இடுபொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், வேளாண்மைத்துறை சார்பில் 28 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS