கொடைக்கானலில் மழையால் அழுகி வரும் பூக்கள்


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால், பிரயண்ட் பூங்காவில் மலர்கள் அழுகி வருகின்றன. கொடைக்கானலில், மலர்க் கண்காட்சிக்காக நடப்பட்ட வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கண்காட்சிக்காக பூத்துக்குலுங்கிய மலர்கள் அனைத்தும் அழுகத் தொடங்கின. குறிப்பாக, ரோஜா தோட்டத்தில் உள்ள ரோஜா மலர்களின் இதழ்கள் உதிர்ந்தும், அழுகியும் காணப்படுகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS