வறட்சி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை


வறட்சி போன்ற நிலைமையை எதிர்கொள்ள பேரிடரைத் தணிப்பதற்கான நிதி அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிட வறட்சி மேலாண்மை குறிப்பேட்டை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‌

பேரிடரில் சிக்கிய இடங்களை வறட்சியால் பாதித்த பகுதிகள் என குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவி்த்திருக்கிறது. பீகார், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நிலவும் வறட்சி குறித்து ஒரு வாரத்திற்குள் அந்த மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி மத்திய வேளாண்துறை ஆலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS