நகை ஏல அறிவிப்பை மூன்று மாதங்களுக்கு தள்ளி வையுங்கள்: தேர்தல் அறிக்கைகளால் விவசாயிகள் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளின் வைத்துள்ள நகைக்கடன் தொடர்பாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ள நகை ஏல அறிவிப்பை மூன்று மாதங்கள் தள்ளி வைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஏராளமான விவசாயிகள் விவசாய பணிக்காக நகைக்கடன் வைத்துள்ளனர்.

தற்போது அரசியல் கட்சிகள் விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்யவுள்ளதாக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அவசர அவசரமாக விவசாய நகைக்கடனுக்கு ஏல அறிப்பு செய்ய இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் முறையிட்டதில், விசாரணை செய்வதாக ஆட்சியர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS