விவசாயத்தை விட்டு அடுப்புக்கரி உற்பத்தி செய்யும் விவசாயிகள்!


விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகள் அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிலில்
ஈடுபட்டுள்ளனர். 

விருநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விளை நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை வளர்த்து கரி மூட்டத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வந்த குல்லூர் சந்தைப் பகுதியில் போதிய மழையின்றி நீர் நிலைகள் வறண்டு போனதால், வேறு வழியில்லாமல் அடுப்புக்கரி உற்பத்தியில் இறங்கியுள்ளனர். 

வறுமையில் வாடும் தங்களுக்கு, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய விவசாயத்திற்கு மாற்றாக அடுப்புக்கரி உற்பத்தியில்
ஈடுபட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாத்தால் தான் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமென அவர்கள் கூறியுள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS