உற்சாகம் பொங்கும் உழவர் திருநாள்: பாரம்பரிய தன்மையுடன் கொண்டாடிய விவசாயி


உழைப்பையும், உழவையும் போற்றும் உன்னத திருவிழாவான பொங்கல் தமிழகத்தில் உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை அதன் பாரம்பரிய தன்மையுடன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி கொண்டாடி வருகிறார் .

விவசாய நிலம் வீட்டு மனைகளாக மாறி வருகின்ற போதிலும், உழவுத் தொழிலை தன் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன். 51 வயது நிறைந்த ராஜேந்திரனுக்கு, பெரம்பலூர் மாவட்டம் எசனை வேப்பந்தட்டை கிராமங்களை ஒட்டி ஒன்பதரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தரிசாய்க் கிடந்த அந்த நிலத்தை பெரும் முயற்சியெடுத்து நன்செய் நிலமாக மாற்றினார் அவர். நெல், மஞ்சள், வாழை, மக்காச்சோளம், பருத்தி என பல்வேறு பயிர்களை விளைவித்து வருகிறார். அதன் விளைவாக, சுற்றுப்புற கிராம மக்களுக்கு, அவர் முன்னோடியாகவும் திகழ்கிறார். உழவையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளையும் போற்றும் பொங்கல் திருநாளை குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் இந்த விவசாயி. கொண்டாடி வருகிறார்

பொங்கல் திருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆவாரம் பூ, வேப்பிலை, மாவிலை உள்ளிட்டவற்றை கொண்டு தங்கள் வயலின் நாற்புறங்களிலும் காப்பு கட்டப்படுவதாக கூறுகிறார் ராஜேந்திரன். இதற்கான காரணங்களையும் அவர் விவரிக்கிறார்.

எதிர்கால தலைமுறையினர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரும்பட்சத்தில் , பொங்கல் பண்டிகை கொண்டாப்படுவதன் நோக்கமும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது ராஜேந்திரனின் கருத்தாக உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS